×

நூஹ் பலாத்கார வழக்கு 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு நடந்த நூஹ் கூட்டு பலாத்காரம் மற்றும் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 24 மற்றும் 25ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், அரியானா மாநிலம் நூஹ் பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்த கும்பல் மைனர் பெண் உட்பட இருவரை கூட்டு பலாத்காரம் செய்து அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், அந்த கும்பல் தாக்கியதில் பெண்ணும் அவரது கணவரும் பலியாகினர். மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் ஹேமந்த் சவுகான், அயன் சவுகான், வினய், ஜெய் பகவான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த அரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கைதான 4 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று அறிவித்தார். இதில் 4 பேருக்கும் மரண தண்டனையும், மொத்தம் ரூ.8.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

The post நூஹ் பலாத்கார வழக்கு 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Noah ,CBI ,New Delhi ,CBI Court ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமீன் வழக்கு தள்ளுபடி